ஶ்ரீரங்கம் நம்பெருமாள் ஸ்ரீ ஜெயந்தி புறப்பாடு மற்றும் உறியடி புறப்பாடுகளுக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று 31.08.2021 செவ்வாய் கிழமை ஸ்ரீநம்பெருமாள் புறப்பாட்டு விபரம் மற்றும் நாளை 01.09.2021 புதன்கிழமை ஸ்ரீ நம்பெருமாள் உறியடி புறப்பாடு நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு கொரானோ தொற்று பரவலை தடுக்கும் நிலையான வாழிகாட்டு நெறிமுறைப்படி கொரோனா நோய் தொற்று பரவலில் இருந்து பக்தர்களை காக்கும் வகையில் ஸ்ரீ நம்பெருமாள் ஸ்ரீ ஜெயந்தி புறப்பாடு மற்றும் ஸ்ரீ நம்பெருமாள் உறியடி புறப்பாடுகளுக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை.
மேலும் இன்று 31.08.2021 மாலை 5.30 மணிக்கு மேல் சேவை கிடையாது என்று ஶ்ரீரங்கம் திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn