ராமஜெயம் கொலை - ரவுடிகள் யார் யாருக்கு எப்போது உண்மை கண்டறியும் சோதனை
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு சிறப்பு புலனாய் குழு திருச்சி நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்றது. இதையடுத்து டெல்லியில் உள்ள உண்மை கண்டறியும் சோதனை நடத்தும் ஆய்வுக்கூடத்தில் இருந்து அனுமதி பெற்று
18, 19 ஆகிய தேதிகளில் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், சீர்காழி சத்தியா ஆகியோரும் 19, 20 தேதிகளில் சாமி ரவி, மாரிமுத்து, ராஜ்குமார், சிவா நான்கு பேருக்கும் 20, 21 ம்தேதி லெஃப்ட் செந்தில், கலைவாணன், சுரேந்தர், திலீப் ஆகிய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது.
இந்த சோதனை சென்னையில் உள்ள காவல்துறையின் தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு அருகே உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனை நடைபெறும் பொழுது டெல்லியில் இருந்து உண்மை கண்டறியும் சோதனை நடத்தும் அறிவியல் தடயவியல் நிபுணர் மோசஸ் தலைமையில் சோதனை நடைபெறும்.
சிறப்பு புலனாய் குழு அதிகாரிகள் உடன் இருப்பார்கள். அதற்கு முன்னதாக அவர்களிடம் சிறிய மருத்துவ சோதனை மற்றும் விசாரணை செய்த பிறகு உண்மை கண்டறியும் சோதனை துவங்குவார்கள் என தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ம் தேதி கடத்தி கொலை செய்யப்பட்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn