திருச்சி மாவட்டத்தில் திருடுபோன ரூ.15லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு!
திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் களவுபோனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2021/2022ம் வருடத்தில் காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக மனு ரசீது பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இத்தகைய செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்க திருச்சி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின் பேரில் அதிரடி விசாரணை செய்யப்பட்டது.
இதில் காணாமல் போன ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள 100 ஆன்ராய்டு வகை செல்போன்களை கடந்த ஒரு வாரத்தில் மீட்டனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்மந்தப்பட்ட செல்போன் உரிமையாளர்களை (மனுதார்கள்) இன்று (13.04.2022) திருச்சி மாவட்ட காவலர் திருமாங்கல்ய திருமண மண்டபத்திற்கு நேரில் அழைத்து அவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.
திருச்சி மாவட்டத்தில் நடப்பு 2021/2022-ம் ஆண்டில் செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக புகார் மனுக்களில் துரித விசாரணை நடத்தி 100 செல்போன்களை மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவும், மீதம் உள்ள புகார் மனுக்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் எனவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO