எங்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி திருச்சி விவசாயிகள் தர்ணா

எங்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி திருச்சி விவசாயிகள் தர்ணா

திருவண்ணாமலை சிப்காட் எதிர்ப்பு போராட்டம் நடத்திய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த விவசாயிகளை உடனடியாக விடுவிக்க கோரியும், விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரியும், அதுவரை எங்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி

 தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் முக்கிய நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு என்றடுத்தனர் அதில், சிப்காட் தொழிற்பேட்டை விவகாரத்தில் விவசாயிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்ட திருவண்ணாமலை ஆட்சியர் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கூறிப்பிடப்பட்டிருந்தது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision