திருச்சியில் 6 மையங்களில் 1,736 பேர் தேர்வு எழுதுகின்றனர்

திருச்சியில் 6 மையங்களில் 1,736 பேர் தேர்வு எழுதுகின்றனர்

தமிழகத்தில் அரசு நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டது.

2,222 பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 130 மையங்களில் 41,485 பேர் தேர்வு எழுதுகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2ல் வெற்றி பெற்றவர்கள் இந்த தேர்வினை எழுத தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்வினை இன்று திருச்சி மாவட்டத்தில் 6 மையங்களில் 1,736 பட்டதாரி ஆசிரியர்கள் எழுதுகின்றனர். தமிழ்-290, ஆங்கிலம்-457, கணிதம்-633, இயற்பியல்- 118, வேதியியல்- 131, தாவரவியல்-18, விலங்கியல்-7, வரலாறு-76, புவியியல்-6 என 1736 பேர் எழுதுகின்றனர்.

திருச்சி பிஷப் ஹீபர் பள்ளி, ஹோலி கிராஸ் பெண்கள் பள்ளி, தேசிய கல்லூரி, அண்ணாசாலை இ.ஆர் மேல்நிலைப்பள்ளி, கன்டோன்மென்ட் ஆர்சி மேல்நிலைப்பள்ளி, ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 மையங்களில் தேர்வுகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision