குருப்-II&II A முதன்மைத் தேர்வுக்கான முழு நேர இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர், உதவியாளர் உள்ளிட்ட 2327 காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு குருப்-II & IIA தேர்வுக்கான அறிவிப்பாணை (20.06.2024) அன்று வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து முதல்நிலைத் தேர்வு (14.09.2024) அன்று நடைபெற்றது.
தற்போது குருப்-II & IIA முதன்மைத் தேர்வினை போட்டித்தேர்வர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (14.10.2004) அன்று துவங்கப்பட்டு 10:30 மணி முதல் 12:30 வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் (12.12.2024) அன்று குருப்-II & IIA முதல்நிலைத் தேர்விற்கான முடிவுகள் வெளியானதால் (23.12.2024) முதல் முழு நேர முதன்மைத் தேர்விற்கான வகுப்புகள் 10:00 மணி முதல் 05:00 வரை நடைபெறவுள்ளது.
மேற்கண்ட முழு நேர பயிற்சி வகுப்பில், சிறப்பு பயிற்றுநர்களை கொண்டு அனைத்துப் பாடப்பகுதிகளுக்கும் பயிற்சியளிப்பதுடன், மாநில அளவில் பாடவாரியாக மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு, இலவசமாக பாடக்குறிப்புகளும் வழங்கப்படும். எனவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த குருப்-11 & IIA முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற அனைத்து போட்டித்தேர்வர்களும் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு 0431-2413510, 9499055901, 9499055902 என்ற திருச்சிராப்பள்ளி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision