10 மாதங்களில் திமுகவினருக்கு விடியல் காட்சி - இது திராவிட ஆட்சியா? இல்லை தில்லுமுல்லு ஆட்சியா? என திருச்சியில் டிடிவி தினகரன் கேள்வி

10 மாதங்களில் திமுகவினருக்கு விடியல் காட்சி - இது திராவிட ஆட்சியா? இல்லை தில்லுமுல்லு ஆட்சியா? என திருச்சியில் டிடிவி தினகரன் கேள்வி

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் மனோகரன், ராஜசேகரன், சாருபாலா தொண்டைமான உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள் மற்றும்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள்  500-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசுகையில்... நமது பொது மக்களின் பிரச்சினை காவிரி பிரச்சினை மட்டுமல்ல இதர மாவட்டங்களில்  குடிநீர் பிரச்சினை இதில் அடங்கியிருக்கிறது. 
கர்நாடகா உச்ச நீதிமன்றத்தை மதிப்பதில்லை. ஒரு எதிர்ப்பான ஆட்சியை தெளிப்பான் ஆட்சியை செய்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தை மதிக்காமல் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி செய்யப்பட்டிருக்கிறது. அண்டை மாநிலமான கர்நாடகா தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் அளவிற்கு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இதை மத்திய அரசாங்கம் முடிவிற்குக் கொண்டுவர வேண்டும். தமிழ் நாட்டை ஆளுகின்ற திமுகவும் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு அணை கட்டுவதை எண்ணத்தையே முழுமையாக அழிக்க வேண்டும். கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது கிளைமா வகையில் அணை கட்டுவதற்கு எந்தவித மறுப்பும் கிடையாது என்று பச்சைக் கொடி காட்டினார்.

அப்போது இருந்த இந்திரா காந்திக்கு அஞ்சி கொண்டு உச்சநீதிமன்றத்தில் இருந்த வழக்கை திரும்பப் பெற்றார். திமுக அரசு பொது மக்களை வஞ்சித்து வருகிறது. கர்நாடக அரசாங்கம் நம்ம மக்களை பாகிஸ்தான் போல நடத்துகிறது. தமிழ்நாட்டில் 85% சதவீதம் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது காவிரித்தாய். தமிழ்நாட்டுப் பிரச்சினையில் திமுக எப்போதும் கோட்டையிட்டு விடும். அணையைக் கட்ட அனுமதித்து விட்டால் சோமாலியா போல் ஆகிவிடும். விடியல் ஆட்சி குடும்பத்திற்கு மட்டும் விடியல் ஆட்சியாக இல்லாமல் தமிழக மக்களுக்கும் விடியல் ஆட்சியாக இருக்க வேண்டும். மத்திய அரசு கர்நாடக அரசுக்கு அணைகட்டும் திட்டத்தை விட்டுவிட்டு காடுகளை வளர்ப்போம் திட்டத்தை துவங்க வலியுறுத்த வேண்டும். நீர் ஆதாரத்தை பெறுவதற்கு காடுகளை வளர்க்க வேண்டும். வெற்றி பெற்றுள்ள திமுகவினர் பேரூராட்சியில் இருந்து மாநகராட்சி வரை எந்த மன தவறு செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.

10 மாதங்களில் பொதுமக்களுக்கு விடியல் ஆட்சி அல்ல திமுகவினருக்கு விடியல் காட்சி. இது திராவிட ஆட்சியா? இல்லை தில்லுமுல்லு ஆட்சியா?. நீட் தேர்வு ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா தமிழ் நாட்டிற்குள் அனுமதிக்க வில்லை. அமமுக எதிர்க்கட்சியும் அல்ல ஆளுங்கட்சியும் அல்ல ஆனால் பொதுமக்கள் என குரல் கொடுக்கும் முதல் கட்சி. அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு நிறைந்திருக்கும் செயல்படும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO