சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பகத்சிங் 116 வது பிறந்தநாள் விழா

சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பகத்சிங் 116 வது பிறந்தநாள் விழா

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட மேற்கு பகுதி குழு 8 வது வார்டு பாண்டமங்கலம் கிளை சார்பாக சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பகத்சிங்-ன், 116 வது பிறந்தநாள் விழா 8 வது வார்டு செயலாளர் R.சரண்சிங் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நடைபெற்றது.

23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் தோழர் பகத்சிங் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வாழ்க்கை வரலாறு தொடர்பாக பேசினார்.

இந்நிகழ்ச்சியில்  கட்சியின் மேற்கு பகுதி செயலாளர்  இரா.சுரேஷ் முத்துசாமி பகுதி  துணை செயலாளர் க.முருகன், பகுதி பொருளாளர் பி ரவீந்திரன்,  9வது வார்டு கிளை செயலாளர் R. ஆனந்தன், இளைஞர்  பெருமன்ற மேற்கு பகுதி பொருளாளர் K.தர்மா மற்றும் கட்சியின் பகுதி குழு உறுப்பினர்கள்.

நாகராஜ், ராமமூர்த்தி, மௌலானா, ஜான் பாட்ஷா மற்றும் மாதர் சங்க மேற்கு  பகுதி கௌரவ தலைவர் வை.புஷ்பம், மேற்கு பகுதி தலைவர் க.ஆயிஷா மற்றும் பார்வதி, மாணவர் பெருமன்ற மாவட்ட த் துணைத் தலைவர் M.ஜெய்லானி, மற்றும் கட்சி கிளை உறுப்பினர்கள் என 20 கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn