திருச்சியில் மிகப்பெரிய ரோபோ செய்முறை போட்டி
ஒருங்கிணைக்கப்பட்ட தென்னிந்தியாவின் மிகப்பெரிய ரோபோ செய்முறை போட்டியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து சிறப்பித்தார். Propeller Technologies மற்றும் Zoho இணைந்து நடத்திய “Tamilnadu Robotics League” போட்டிகள் திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு மற்றும் கேரளாவிலுள்ள 280க்கும் மேற்பட்ட பள்ளியை சார்ந்த 3000திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். Senior, Junior, Makeathon என மூன்று பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்றது. அதில் மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் சொந்த கண்டுபிடிப்பான ரோபோட்களை இயக்கினர்.
இந்த பிரமாண்டமான போட்டிகளில் 3000க்கும் அதிகமான இளம் விஞ்ஞானிகள் பங்குபெற்றது பாராட்டுக்குரியது. இதில் ஏர்ஷோ ட்ரோன் கொண்டு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இப்போட்டியின் சிறப்பு விருந்தினராக தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியினை துவக்கிவைத்தார்.
ப்ரொபெல்லர் டெக்னாலஜியினால் பயிற்றுவிக்கப்பட்ட பார்வைத்திறனற்ற மாற்றுதிறனாளி மாணவர்கள் பலர் இப்போட்டிகளில் கலந்துகொண்டது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும். இப்போட்டிகளில் கலந்துகொண்டோருக்கு சான்றிதழ்களும், போட்டிகளில் வெற்றிப்பெற்றோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision