புதிய கட்டடங்களை திறந்து, ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை வழங்கிய பெரம்பலூர் எம் பி
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பச்சைமலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தபிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் கோம்பை ஊராட்சி, தளுர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பில் ரூபாய் 49.12 இலட்சம் மதிப்பீட்டில் மாவட்ட ஊராட்சி மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள எடைமேடையையும்,
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூபாய் 46.90 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோம்பை ஊராட்சி செம்புளிச்சான்பட்டி கிராம ஊராட்சி செயலக கட்டிடத்தையும் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்நேரு திறந்து வைத்து, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 70 பயனாளிகளுக்கு ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார்,முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் இராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் குமார், துறையூர் ஒன்றிய பெருந்தலைவர் சரண்யா மோகன்தாஸ்,
கோம்பை ஊராட்சிமன்றத் தலைவர் ரவிந்திரன், வண்ணாடு ஊராட்சி மன்றத்தலைவர் சரோஜா முத்துராமன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision