திருச்சி மாவட்டத்தில் நேற்று (05.11.2021) பெய்த மழை அளவு விவரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நந்தியார் ஹெட் 2.40 மி.மீட்டர், புள்ளம்பாடியில் 6.80 மி.மீட்டர், கோவில்பட்டி 20.40 மி.மீட்டர், வாத்தலை அணைக்கட்டு 43.40 மி.மீட்டர்
பொன்னையார் டேம் 36.00 மி.மீட்டர் மழை பதிவானது. அதேபோல், மருங்காபுரி 32.40 மி.மீட்டர், நவலூர் குட்டப்பட்டு 1.00 மி.மீட்டர், தேன்பரநாடு 43மி.மீட்டர், கொப்பம்பட்டி 5 மி.மீட்டர், துறையூர் 2 மி.மீட்டர் ஆகிய அளவுகளில் மழை பெய்து உள்ளதாக தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 191.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 7.97 ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது. திருச்சி தேன்பரநாடு 43மி.மீட்டர், அதிக அளவு மழை பெய்து உள்ளது. அடுத்ததாக பொன்னையார் டேம் 36.00 மி.மீட்டர் மழை பெய்துள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision