திருச்சி மாநகரில் குவிந்த 600 டன் குப்பை

திருச்சி மாநகரில் குவிந்த 600 டன் குப்பை

திருச்சி மாநகரில் சராசரியாக தினசரி 450 டன் குப்பைகள் சேகரமாகி வருகின்றன. அவற்றை துப்புரவு பணியாளர் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலம் தினசரி அகற்றி வருகிறது. பண்டிகை காலங்களில் மேலும் அதிக அளவில் குப்பைகள் குவிவது வழக்கம்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையையெட்டி என் எஸ் பி ரோடு, சின்னக்கடை வீதி, பெரியகடைவீதி, காந்தி மார்க்கெட், தில்லைநகர், சாஸ்திரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்களில் 210 டன் அளவிற்கு குப்பைகள் ஆங்காங்கே பெருமாள் குவிந்தன. அவற்றை துப்புரவு பணியாளர்கள் பகுதி பகுதியாக அகற்றி வருகின்றனர். அதேபோல் குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision