இரவு நேர ஊரடங்கு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை
கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது. இதில் இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி மேற்கண்ட அரசாணையை அமல்படுத்த திருச்சி மாநகரில் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு அவர்கள் தலைமையில் அனைத்து காவல் நிலையங்களிலும் மொத்தம் 24 இடங்களில் 1 காவல் உதவி ஆணையர், 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 200 மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். இரவு நேர ஊரடங்கு சிறப்பு வாகன தணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கயில் ஈடுப்படுத்தப்பட உள்ளது. அரசு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் வழக்கம் போல் இரவு ரோந்து பணியில் காவல் உதவி ஆணையர் தலைமையில் 4 ஆய்வாளர்கள் மற்றும் மாநகரின் நுழைவு பகுதிகளில் உள்ள 8 சோதனைச்சாவடிகள், 14 ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுப்பப்படுத்தப்பட உள்ளன. எனவே பொதுமக்கள் அரசின் நெறிமுறைகளை பின்பற்றி காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் கேட்டுக்கொள்கிறார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu