கிணற்றில் செத்து மிதந்த மீன்கள் - விஷம் கலக்கப்பட்டதா?

கிணற்றில் செத்து மிதந்த மீன்கள்  - விஷம் கலக்கப்பட்டதா?

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த உசிலம்பட்டி ஊராட்சியில் உள்ள பழைய காலனி பகுதியில் சுமார் 168 குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்பில் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கிணற்றின் அருகே ஆழ்குழாய் கிணறு அமைத்து 3 சின்டெக்ஸ் டேங்க் மூலமாக குடியிருப்புகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று காலை கிணற்றில் மர்மமான முறைகள் மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கிணற்றிலிருந்து அருகில் உள்ள போர் மூலம் தண்ணீர் வருவதால், இந்த தண்ணீரும் மாசுபட்டிருக்கும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் தண்ணீரை பயன்படுத்த யோசித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர் .

தகவல் அறிந்தும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் வந்து கிணற்றில் மர்ம நபர்களால் விஷம் எதுவும் கலக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தற்பொழுது அந்த போர்வெல் நீரை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என இணைப்பு துண்டித்து உள்ளனர். மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாற்று ஏற்பாடு மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது என ஊராட்சி ஒன்றிய ஆணையர் தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision