கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சுகாதாரத் திருவிழா

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சுகாதாரத் திருவிழா


 அந்தநல்லூர் ஒன்றியம், முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், வட்டார அளவிலான சுகாதார விழா நேற்று  நடைபெற்றது.

விழாவில் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற உறுப்பினர்  திருநாவுக்கரசர் , திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர்  பழனியாண்டி , அந்த நல்லூர் ஒன்றியக் குழுத் தலைவர் துரைராஜ், முத்தரசநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிசிவன் ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் மக்களினை நேரடியாக சென்றடைக்கின்ற திட்டங்களாகவே அமைந்துள்ளது.

குறிப்பாக  கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் தோல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு மருத்துவம், மன நல மருத்துவம் ஆகியவைகளை, மருத்துவர்களை கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து, நோயை கண்டறிந்து, தேவைப்படுவோர்க்கு உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வட்டாரத்திலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ முகாம்களில் இரத்தம் (எச்.பி) அளவு, இரத்த அழுத்த பரிசோதனை (30 வயதிற்கு மேற்பட்டோருக்கு) இரத்தத்தில் சர்க்கரையின் அளவு பரிசோதனை (30 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும், 18-29 வயதிற்குரியவர்களுக்கு தேவையிருப்பின்), இரத்தத்தில் கொழுப்பின் அளவீடு பரிசோதனை.

மலேரியா இரத்தத்தடவல் பரிசோதனை, இ.சி.ஜி. (இதய துடிப்பவை அளவி இதய மின்துடிப்புப் பதிவு) அல்ட்ராசோனாகிராம் கர்ப்பிணிகள் அனைவருக்கும், கண்புரை ஆய்வு மற்றும் பார்வைக் குறைபாட்டிற்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்குதல், செமி ஆட்டோ அனலைசர் மூலம் பரிசோதனை மற்றும் முக்கிய பரிசோதனைகள், கொரோனா தடுப்பூசி வழங்குதல், குழந்தைகளுக்கு மற்றும் தாய்மார்களுக்கு இதர தடுப்பூசி வழங்குதல், காசநோய் பரிசோதனை, பல் பரிசோதனை, காது, மூக்கு மற்றும் தொண்டை பரிசோதனை, நல்வாழ்விற்கான யோகா மற்றும் தியானம், காணொலி மூலமாக மருத்துவ ஆலோசனை, ஆலோசனை மையம் உள்ளிட்டவைகளும் மேலும்  இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது பொதுமக்களை பல்வேறு நோய்களிலிருந்து தொடக்க நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்துவதாகும்.

நிகழ்வில் கலந்துக்கொண்ட பள்ளியை பார்வையிட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்களும், நாடளுமன்ற உறுப்பிள் அவர்களும் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பள்ளியின் தேவைகளை நிறைவேற்றி தருவாக கூறினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa


#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO