திருச்சி 3 உயர் மட்ட பாலங்கள் கட்டுவதற்கு மெட்ரோ ரயில் திட்ட ஆய்வால் தாமதம் அமைச்சர் எ.வ.வேலு. திருச்சியில் பேட்டி
சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அமைச்சர் எ.வ வேலு....
பால் பண்ணை முதல் தூவக்குடி வரை உயர்மட்ட பாலம், சர்வீஸ் சாலை இரண்டுமே அமைக்க உத்தேசம் தான். ஆனால் அங்குள்ள வியாபாரிகள் பல்வே சங்கங்கள் இனைந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருச்சி மாநகர பகுதிகளில் 3 இடங்களில் உயர்மட்ட பாலம் பணிகள் கிடப்பில் போடப்பட்டதா மெட்ரோ மற்றும் மாநில நெடுஞ்சாலை துறை இதில் இனைந்து பேசி மெட்ரோவின் ஆய்விற்கு பின்னர் தான் முடிவு செய்ய முடியும் 3 உயர்மட்ட பாலங்கள் அமைக்க விரிவான திட்ட அறிக்கையை மாநில நெடுஞ்சாலை துறை தயார் செய்தது.
ஆனால் மெட்ரோ நீங்கள் பாலம் அமைத்தால் நாங்கள் எப்படி தனியாக பில்லர் அமைக்க முடியும் என்று கேட்டு கூட்டு முயற்சியில் இதனை செய்யலாம் என கூறி உள்ளனர். ஆனால் சரியாக எப்போது இந்த பணிகள் துவங்கும் என்று சொல்ல முடியாது. திருச்சி காவிரி புதிய பாலப்பணிகள் விரைவில் தொடங்கும். ரூபாய் 120 கோடி மதிப்பீட்டில் பாலப்பணிகள் நடைபெற உள்ளது. அதற்கான டெண்டர் இந்த மாதத்தில் விடப்பட்டு பணிகளை துவங்க உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
திருச்சி காவிரி புதிய பாலப்பணிகள் விரைவில் தொடங்கும். ரூபாய் 120 கோடி மதிப்பீட்டில் பாலப்பணிகள் நடைபெற உள்ளது. அதற்கான டெண்டர் இந்த மாதத்தில் விடப்பட்டு பணிகளை துவங்க உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். திருச்சியில் துவாக்குடி பகுதியில் இருந்து பூவாளூர், மணச்சநல்லூர், ஜீயபுரம் வரை புறவழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தும் பணிக்கு திட்டமிட்டுள்ளோம். அதற்கான திட்ட மதிப்பீடு உருவாக்கப்பட்டு விரைவில் பணி துவங்கும் என தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision