பக்தர்கள் இல்லாமல் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றப்பட்டது.

பக்தர்கள் இல்லாமல் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றப்பட்டது.

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த தேர்த்திருவிழாவில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர் திருவிழா நடைபெறவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவில் திருவிழாக்கள் மற்றும் மதம் சம்பந்தப்பட்ட விழாக்கள் நடைபெறுவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. இதன் காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெறுமா என்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், கட்டுப்பாடுகளுடன் தேர்த்திருவிழா நடைபெற அரசு அனுமதித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் 8.30 மணி வரை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படனர். ஆனால் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து காலை 8.30 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கோவிலை சுற்றி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr