தற்காலிக மார்க்கெட்டிற்கு செல்லமாட்டோம். சில்லறை வியாபாரிகள் உறுதி
கொரோனா தொற்று பரவல் காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள சில்லறை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டு நுழைவு வாயில் கதவுகள் பூட்டப்பட்டன. இந்நிலையில் இன்று முதல் ஜி கார்னர் மைதானத்தில் சில்லறை வியாபாரிகள் வியாபாரம் செய்வார்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
ஆனால் இன்று காலை வழக்கம் போல் வியாபாரிகள் சில்லறை வியாபாரம் செய்ததால் மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை எடுக்கும்படி தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னதாக கோட்டை காவல் நிலைய உதவி ஆணையர் ரவி அபிராம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
சில்லறை வியாபாரிகளின் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்த பின்னர் முடிவை அறிவிப்பதாக காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறியதையெடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr