திருச்சியில் வனத்துறை சார்பாக பசுமை தமிழக தினம் கொண்டாட்டம்

திருச்சியில் வனத்துறை சார்பாக பசுமை தமிழக தினம் கொண்டாட்டம்

திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர், எஸ்.சதீஷ் வழிகாட்டுதளின்படியும், திருச்சி மாவட்ட வன அலுவலர் சீ.கிருத்திகா அறிவுறுத்தலின் படியும், இரண்டாம் ஆண்டு பசுமை தமிழக தினம் (24.09.2024)வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் தற்போது உள்ள பசுமை போர்வை 10.5% ஆக உள்ளது. இதை 33% ஆக உயர்த்த தமிழ்நாடு பசுமை இயக்கம் பல்வேறு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இயற்கை ஆர்வலர் மற்றும் பள்ளி மாணவர்களுடன் ஒன்றிணைந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரப்படுகிறது .

இதன் ஒருபகுதியாக இந்த ஆண்டு லால்குடி வட்டம் குமூளூர் முருகன் கோவில் பகுதியில் 500 மரக்கன்றுகள் மற்றும் ஆயக்குடி பகுதியில் 500 மரக்கன்றுகள் ஆக மொத்தம் 1000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் 20 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பசுமை போர்வை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது .

நடப்பாண்டில் திருச்சி மாவட்டத்தில் திருச்சி, துறையூர், மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி பகுதிகளில் நடவு பணிகளுக்காக 21 லட்சம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியை ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் டோம்னிக் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்வில் VRM அரசு சாரா தொண்டு நிறுவன தலைவர் பாலகிருஷ்ணன், சாய் வித்யாலயா பள்ளி மாணவ மாணவியர்கள், கிராம பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள், திருச்சி வனச்சரக அலுவலர் கோபிநாத் மற்றும் சரக பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision