திருச்சி டிமார்ட் ல் அதிக கூட்டம் 5000 ரூபாய் அபராதம் வட்டாச்சியர் அதிரடி

திருச்சி டிமார்ட் ல் அதிக கூட்டம் 5000 ரூபாய் அபராதம் வட்டாச்சியர் அதிரடி

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் திருவிழா, மதம் சார்ந்த கூட்டம், திரையரங்கு, வணிக வளாகங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். முககவசம், கையுறை, கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை செந்தணீர்புரம் பகுதியிலுள்ள தனியார் வணிக வளாகத்தில் ( டி மார்ட் ) பொதுமக்கள் அதிகம் உள்ளதாக வரப்பெற்ற செய்தியை தொடர்ந்து அந்நிறுவனத்திற்கு  ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டது.

கிழக்கு வட்டாசியர் குகன் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்த்து, முகவசம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr