விவசாய கடன் தள்ளுபடியில் நடந்துள்ள முறைகேடுகள், ஊழல்களை திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் ஆதாரத்துடன் வெளியிடவுள்ளோம் என கே.என்.நேரு பேட்டி

விவசாய கடன் தள்ளுபடியில் நடந்துள்ள முறைகேடுகள், ஊழல்களை திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் ஆதாரத்துடன் வெளியிடவுள்ளோம் என கே.என்.நேரு பேட்டி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் 700 ஏக்கர் பரப்பளவில் திமுக மாநில மாநாடு வரும் மார்ச் 14 நடைபெறுகிறது. இந்த மாநாட்டு திடலைப் பார்வையிட்டு, 
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் வரும் 22 ம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான திமுக கட்சியினர் மற்றும் நிர்வாகிகளுடன்  திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளர் கே. என். நேரு பேசியதாவது.
     திமுக தலைமை கழகத்திலிருந்து ஒரு உத்தரவு வந்த்து, அதில் பெட்ரோல், டீசல், விலை உயர்வைக் கண்டித்து அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மத்திய, மாநில அரசினைக் கண்டித்து நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட வரும் 24 ம் தேதி விருப்ப மனு கட்டவுள்ளேன் என்றார்.

  இதனைத் தொடர்ந்து கே.என். நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது..
   திமுக மாநில மாநாடு 700 ஏக்கர் பரப்பளவில் வரும் 14 ம் தேதி நடைபெறவுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த மாநாட்டு பணிகள் வரும் 22 ம் தேதி துவங்கி 10 நாட்களில் முடிவடைகிறது. இந்த மாநாட்டில் 7 லட்சத்திலிருந்து 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் 77 மாவட்ட கழகங்கங்கள் உள்ளன.

ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்து 5 முதல் 6 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். மாவட்டம் வாரியாக பங்கேற்பவர்களுக்கென தனி கேபின் அமைக்கவுள்ளோம் விவசாய கடன் தள்ளுபடியில் நடந்துள்ள முறைகேடுகள், ஊழல்கள் குறித்த பட்டியலை திமுக ஆட்சிக்கு வந்ததும் வெளியிட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திமுக முதன்மை செயலாளர் நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!


https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH