விவசாய சங்க பிரச்சார பரப்புரை இயக்கம்.

விவசாய சங்க பிரச்சார பரப்புரை இயக்கம்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பட்டியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் மத்திய அரசின் வஞ்சக செயலை விளக்கி பிரச்சார பரப்புரை இயக்கம் நடைபெற்றது.

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் மத்திய அரசின் வஞ்சக சேலை விலக்கி பிப்ரவரி 18, 19, 20 ஆகிய தேதிகளில் மாநிலம் தழுவிய பிரச்சார பரப்பரை இயக்கம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய குழு எம்.ராமசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வேளாங்கண்ணி, ஆரோக்கியம், செல்லின், லீமா ரோஸி, பழனியம்மாள், அந்தோணியம்மாள், பாலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் வீதோச மாவட்ட தலைவர் ஏ.டி.சண்முகானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய துணைச் செயலாளர் எம்.தங்கராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் ஸ்டீபன் சேகர், ஒன்றிய குழு சக்தி என்ற பழனிச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

நாட்டில் உள்ள பெரும் முதலாளிகளுக்கு மத்திய அரசு லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளது. நம் நாட்டில் 15 கோடி குடும்பங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் வேலை பெரும் உரிமை அட்டை பெற்றுள்ளன. ஆண்டுக்கு 2.74 லட்சம் கோடி தேவை என பொருளாதார அறிஞர்கள் கூறுவதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. 2023 - 24 ஆம் ஆண்டிற்கு 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு ரூபாய் 60 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி வஞ்சகம் செய்துள்ளது என்பதனை விளக்கி ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களுக்கு பரப்புரை செய்தனர்.

அதனை தொடர்ந்து மத்திய அரசையும் ஊரக வளர்ச்சித் துறையையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn