திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கிய போலீசார்

திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கிய போலீசார்

திருச்சி மாநகரில் மத்திய பேருந்து நிலையம், முக்கிய சந்திப்புகள், சிக்னல்கள் மற்றும் இரவு நேரங்களில் சாலையில் ஒரங்களில் திருநங்கைகளால் பாலியல் தொல்லை, பணம், செல்போன்கள் வழிப்பறி மற்றும் சில இன்னல்களை சந்திப்பதாக பொதுமக்களிடமிருந்து அதிகளவில் வாய்வழி புகார்கள் பெறப்பட்ட நிலையில்,

திருநங்கைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, உத்தரவின்பேரில், 3 பெண் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 18 காவல் ஆளிநர்களுடன் 3 குழுக்களாக பிரிந்து, நேற்று 30.01.2024ந்தேதி இரவு நேரத்தில் திருச்சி மாநகர பகுதிகளான மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம், சஞ்சீவிநகர் சந்திப்பு மற்றும் அரியமங்கலம் ஆகிய பகுதிகளில் ரோந்து செய்யப்பட்டது.

மேற்கண்ட சிறப்பு ரோந்தின்போது இரவு நேரங்களில் சுற்றி திரிந்த சுமார் 40 திருநங்ககளை பிடித்து, தக்க அறிவுரைகள் வழங்கி எச்சரித்தும், மேலும் எச்சரிக்கையை மீறி சாலைகளில் மீண்டும் சுற்றி திரியும் திருநங்கைகள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடுமையாக எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

திருச்சி மாநகரில் பொதுமக்களின் நலன் கருதி திருநங்கைகள் இரவுநேரத்தில் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பு இரவு நேர ரோந்துதொடர்ந்து நடத்தப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision