திருச்சியில் அதிமுக நிர்வாகி சரமாரியாக வெட்டி கொலை

திருச்சியில் அதிமுக நிர்வாகி சரமாரியாக வெட்டி கொலை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் இவரது மகன் கோபி (32). இவர் அதிமுக கட்சியில் நிர்வாகியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று (08.03.2023) இரவு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கோபி டிபன் ஆடர் கொடுத்துவிட்டு சென்றவர் சிறிது நேரம் கழித்து டிப்பனை வாங்க வந்த பொழுது மூன்று பேர் கொண்ட  கோபியை அறிவாளார் வெட்டி உள்ளது.

அப்படி வெட்டும் பொழுது அந்த ஹோட்டலில் இருந்த கல்லாப்பெட்டியில் முதல் வெட்டு விழுந்துள்ளது. அவர்களிடம் இருந்து கோபி தப்பி ஓட முயன்றப்போது  மூன்று பேர் கொண்ட கும்பல் கோபியை மறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொலை முன் விரோதத்தால் நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா என தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கோபி என்கிற கோவிந்தராஜ் பெற்றோரை விட்டு பிரிந்து துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில்கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார். துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் உள்ள ரவுடி நந்தா குருப்போடு தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்களை அரிவாளால் வெட்டிய வழக்கு இவர் மீது நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு நேற்று திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளார். அதற்காக விசாரணைக்கு சென்றவர் மாலை 5 மணி வரை திருச்சி நீதிமன்றத்தில் இருந்துள்ளார். சம்பவ இடத்தை திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித் குமார் பார்வையிட்டார்.

பின்னர் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் மேற்பார்வையில் துவாக்குடி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், பெல் இன்ஸ்பெக்டர் கமலவேணி, திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், ஆகியோர் அடங்கிய மூன்று தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கோபியின் நடவடிக்கை பிடிக்காததால் புகார் தருவதற்கு அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் வரவில்லை, பின்னர் போலீசார் சமரசம் பேசியதை தொடர்ந்து கோபி தாய் ஜீவாவிடமிருந்து துவாக்குடி போலீசார் புகார் பெற்றுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn