கார்த்திகை மாதம் பிறப்பு - திருச்சியில் ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து விரதம்
கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று ஐயப்பன் பக்தர்கள் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள ஐயப்பன் கோவில், மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவில், வழிவிடு முருகன் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில் ஏராளமான ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்தனர். ஒரு மண்டலம் என்னும் 48 நாட்கள் விரதத்தை கடைபிடிப்பார்கள்.
ஐயப்பன் பக்தர்கள் ருத்திராட்சம் அல்லது துளசிமாலை 54 அல்லது 108 மணிகள் உடையதாக மாலையில் ஐயப்பன் பதக்கம் ஒன்றையும் சேர்த்து துணை மாலை ஒன்றையும் சேர்த்து அணிந்து கொண்டனர்.
மேலும் கறுப்பு, நீலம், பச்சை நிறமுள்ள ஆடைகளை அணிந்தும், கன்னி ஸ்வாமிகள் கறுப்பு நிற ஆடைகளை அணிந்து கொள்வர்கள்.
மாலை அணிந்து கொண்ட ஐயப்பன் பக்தர்கள் தினசரி ஐயப்பனை வேண்டி பூஜை செய்து 48-ம் நாள் இருமுடி கட்டி சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜையில் பங்கேற்பார்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO