திருச்சி என்.ஐ.டியில் 10 மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி

திருச்சி என்.ஐ.டியில் 10 மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்நிலையில் கொரோனா உருமாறி ஓமைக்ரான் தொற்றாக தற்போது பரவி வரும் நிலையில் இதனை கண்டறிய மற்றும் பரவாமல் தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் புறநானூற்று பரவாமல் இருக்க அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து திருச்சி துவாக்குடி பகுதியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் பயின்று வந்த மாணவர்கள் செய்முறைத் தேர்வுக்காக வெளியூரில் இருந்து வந்த 577 மாணவர்களுக்கு கோவிட் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் 10 மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா வெளிமாநிலத்தில் இருந்து கல்வி கற்க திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்திற்கு வந்தவர்கள். மேலும் இவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளதா என்பதை அறிய அடுத்த கட்டமாக இவருடைய மாதிரிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn