ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேர் சம்மதம் - ஒருவர் மறுப்பு
அமைச்சர் நேருவின் சகோதர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி நடை பயிற்சி சென்ற பொழுது கடத்தி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை சிறப்பு புலனாய்வு குழு தற்போது விசாரித்து வருகிறது. ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரிடம்(ரவுடிகளிடம்) உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்தனர்.
சத்யராஜ், லெட்சுமி நாரயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா (எ) குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 நீதிபதி சிவக்குமார் முன் உண்மை கண்டறியும் சோதனைக்கு கடந்த 14.11.2022ம் தேதி சம்மதம் தெரிவித்தனர். இதில் தென்கோவன் (எ) சண்முகம் மட்டும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மோகன் ராம், நரைமுடி கணேசன், திணேஷ்,லெப்ட் செந்தில்( கடலூர் மத்திய சிறையில் உள்ளவர்) 4 பேர் நேரில் ஆஜராகாத நிலையில் இன்று (17.11.2022)ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
மோகன்ராம் முதலில் நீதிபதி சிவக்குமாரிடம் சம்மதம் தெரிவித்தார். மேலும் உண்மை கண்டறியும் சோதனையின் போது மருத்துவர் மற்றும் வழக்கறிஞர் உடன் இருக்க வேண்டும் என்று நீதிபதியிடம் வேண்டுகோள் வைத்து மனுதாக்கல் செய்தனர். பின்னர் மூன்று பேரும் சம்மதம் தெரிவித்தனர். ராமஜெயம் கொலையில் சந்தேகப்படும் 13 பேரில் 12 பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்து விட்டனர்.
வருகிற 21ஆம் தேதி 13 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார் அதற்கு முன்னதாக சம்மதம் தெரிவித்த 12 பேருக்கும் உடல் தகுதி சோதனை நடத்த நீதிபதி சிவகுமார் உத்தரவு பிறப்பித்தார். ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை வருகிற 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அதற்க்கு முன்னதாக 12 பேருக்கும் நான்கு நபர்களாக மூன்று நாட்களில் உடல் தகுதி சோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவிற்கு நீதிபதி ஆணையிட்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO