தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்யஆசிரியர் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்யஆசிரியர் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு லட்சம் ஆசிரியர்களை படிப்படியாக பணி நியமனம் செய்ய வேண்டும், என்று ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்  கூட்டு கூட்டமைப்பு மாநில
ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் பேட்டியளித்த போதுதமிழகத்தில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, 2012ம் ஆண்டு முதல், ஆசிரியர் தகுதி தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதுவரை நடத்தப்பட்ட 5 ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி, ஒரு லட்சம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், எட்டு ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

தமிழக முதல்வர், கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கு எங்கள் நிலையை, பல முறை எடுத்துக் கூறியிருக்கிறோம். உண்ணாவிரதம், ஊர்வலம், மறியல் போன்ற 25க்கும் மேற்பட்ட போராட்டங்களையும் நடத்தியிருக்கிறோம். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, ஒரு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், 40 ஆயிரம் பேருக்கு பணி நியமனம் செய்யப்பட்டது.அதன் பின், ஒரு ஆசிரியர் பணியிடம் கூட நிரப்பப்பட வில்லை.

ஏற்கனவே, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, மீண்டும் தகுதி தேர்வு எழுத வேண்டும் என்று கூறுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.நீட் தேர்வு காரணமாக, இறந்தவர்களை விட, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும், வேலை கிடைக்காமல் தற்கொலை செய்தவர்கள் தான் அதிகம்.வழக்கு நிலுவையில் இருப்பதால், புதிய பணியிடங்கள் நியமனத்தில் சிக்கல் இருப்பதாக கூறுகின்றனர். 

நியமன தேர்வை தவிர்த்து விட்டு, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு லட்சம் ஆசிரியர்களையும் படிப்படியாக பணி நியமனம் செய்ய வேண்டும்.வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், 2013, 14, மற்றும் 17 ல் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும், என்று வலியுறுத்துகிறோம் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH