நிலுவையுள்ள சம்பளம் மற்றும் தற்காலிக பணியை தொடர்ந்து வழங்க கோரி ஒப்பந்த செவிலியர்கள் சுகாதார துறை அமைச்சரிடம் மனு

நிலுவையுள்ள சம்பளம் மற்றும் தற்காலிக பணியை தொடர்ந்து வழங்க கோரி ஒப்பந்த செவிலியர்கள் சுகாதார துறை அமைச்சரிடம் மனு

உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவியது‌. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உதவியாகவும், கோவிட் சிகிச்சை பிரிவில் பணிபுரிய கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 65 பேர் ஒப்பந்த அடிப்படையில் திருச்சி அரசு மருத்துவமனை கோவிட் சிகிச்சை பிரிவில் நியமிக்கப்பட்டனர்.

இதில் தற்காலிக லேப் டெக்னீசியன் பணிக்கு 15 பேருக்கு மாத சம்பளமாக ரூபாய் 12000 மற்றும் கோவிட்-19 பிரிவில் உள்ள தற்காலிக பணியாளர்கள் 40 பேருக்கு மாத சம்பளமாக ரூபாய் 10 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

மேலும் இதுகுறித்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீனிடம் நாங்கள் சந்தித்து பேசினோம். அரசிடமிருந்து நிதி இன்னும் வரவில்லை. வந்ததும் உங்களுக்கு சம்பளம் வரும், மேலும் உங்கள் ஒப்பந்தம் பிப்ரவரி மாதத்துடன் முடிந்து விட்டது. மார்ச் மாதம் முதல் நீங்கள் பணிக்கு வர வேண்டாம் என தெரிவித்தார்.

இதனால் இன்று சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து ஒப்பந்த செவிலியர்கள் மனு அளித்தனர். மேலும் எங்களுடைய கோரிக்கையை சுகாதார துறை அமைச்சர் நிறைவேற்றி தருவதாக கூறியுள்ளனார் என மனு அளித்தவர்கள் தெரிவித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH