திருச்சி இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் மையத்தில் அப்துல்கலாம் நினைவு சிலை திறப்பு நிகழ்ச்சி

திருச்சி இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் மையத்தில் அப்துல்கலாம் நினைவு சிலை திறப்பு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பிஹெச்இஎல் வளாகத்தில் அமைந்துள்ள இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் மையத்தில், முன்னாள் குடியரசுத்தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவு சிலையை திருச்சி தேசிய தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் இயக்குனர் மினிஷாஜி தாமஸ் இன்று திறந்து வைத்துள்ளார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேசிய தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் பேசுகையில், பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் தொலைநோக்கு பார்வை பற்றியும் அதனை நிறைவேற்ற வேண்டிய மக்கள் கடமையை பற்றியும் விவரித்தார். மேலும் அப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த சமயத்தில் அவரை நேரில் சென்று தான் சந்தித்த நிகழ்வுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து பேசிய மையத்தின் தலைவர் டாக்டர் குமரேசன்... பாரத ரத்னா ஏபிஜே அப்துல் கலாம் கனவு கண்டது போல் தொழில்நுட்பத்தை அற்புதமான உயரத்திற்கு கொண்டு செல்ல மட்டுமே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். இதற்காக அனைவரும் ஒன்றாக ஒரு அணியாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி லோக்கல் சென்டரின் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் நாற்பத்தி 49 ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. 2021 முதல் 23 அமர்வுக்கான தலைவராக ராஜசேகரன் என்ற பொறுப்பேற்றுள்ளார். மையத்தின் கவுரவ செயலாளர் ஆனந்த், கமிட்டி  உறுப்பினர்களான டாக்டர் ஆர்.மஞ்சுளா, Er.எஸ் தலைவர், மையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision