ஆற்றில் கொட்டப்பட்ட குப்பையில் தீ - கரும் புகையால் வாகன ஒட்டிகள் அவதி.
திருச்சி மாவட்டம் சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் கொள்ளிடம் ஆற்றில் கரையோர பகுதிகளில் குப்பை கழிவுகளை சமூகவிரோதிகள் பிளாஸ்டிக் குப்பைகள் ,இரவு ஹோட்டல்கள் மற்றும் தள்ளு வண்டிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி கடைகளில் இருந்து கொண்டு வரும் கழிவுகளை கொட்டி வருகின்றனர்.
இந்த குப்பைகளிலிருந்து வரும் துர்நாற்றம் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் என அனைவரும் முகம் சுளிக்க வைக்கிறது. இதனை அவ்வப்போது அங்குள்ளோர் தீ வைத்து எரித்து விடுகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை அங்கு கொட்டி வைத்திருந்த சேதமடைந்த கணினியின் உதிரி பாகங்களை மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்தத போது பயங்கர கரும்புகை கிளம்பியது. இதனால் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருந்து திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் செல்வார்கள் அவ்வழியாக சாலையை கடந்த பொழுது மூச்சு விட சிரமப்பட்டனர்.
சுமார் ஒரு மணி நேரமாக கரும் புகையுடன் எரிந்த தீயினால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் பஞ்சாயத்து நிர்வாகம் காவல்துறையினர் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் குப்பைகளை கொட்டாமல் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision