டெல்டா மாவட்டங்களுக்கு இடையேயான தடகள போட்டியில் பதக்கங்களை குவித்த திருச்சி தேசிய கல்லூரி மாணவிகள்

டெல்டா மாவட்டங்களுக்கு இடையேயான தடகள போட்டியில் பதக்கங்களை குவித்த திருச்சி தேசிய கல்லூரி மாணவிகள்

டெல்டா மாவட்ட மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு தடகள அமைப்பு டெல்டா மாவட்டங்களுக்கு இடையேயான தடகள போட்டியை நடத்தியது.

இதில் திருச்சி தேசிய கல்லூரி மாணவர்கள் பங்கேற்று சிறப்பாக விளையாடி பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

இதுகுறித்து கல்லூரியின் துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி கூறுகையில்,

"மாணவர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இது அமைந்தது. டெல்டா மாவட்டங்களுக்கிடையான நடைபெற்ற இப்போட்டியில் கல்லூரியிலிருந்து கலந்துகொண்ட மாணவிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர்.

மாணவி காவியா 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும்,ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ளார்.

 மாணவி தேஜல்வவினி 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கமும் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளியும் வென்றார்.

நீளம் தாண்டுதலில் தங்கப்பதக்கத்தை மாணவி சோபனா வென்றுள்ளார் .

மாணவி அக்ஷயா ஸ்ரீ 400 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மேலும் மாணவி சுவாதி 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மாணவிகளின் இந்த சாதனை கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது" என்றார்.