சாலை விபத்துகளை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு நள்ளிரவில் தேநீர்
மணப்பாறை பகுதியானது திருச்சி – திண்டுக்கல் மற்றும் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இடையேயான பகுதியாகும். நெடுஞ்சாலைகளிருப்பதால் இங்கு தினந்தோறும் சாலை விபத்துகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அதிலும் நள்ளிரவில் நடைபெறும் விபத்துகள் தான் இதில் முதலிடம் எனக் கூறப்படுகிறது.
இதை கட்டுப்படுத்தும் வகையில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி நிர்வாகத்தினர், அதிக போக்குவரத்து இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தேனீர் அளித்து, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த பணியில் வையம்பட்டி காவல்துறையினரும், நெடுஞ்சாலை ரோந்து போலீஸாரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO