முக்கொம்பு வந்தடைந்தது காவிரி நீர்... மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்!

முக்கொம்பு வந்தடைந்தது காவிரி நீர்... மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்!

கர்நாடக - கேரள மாநிலங்களில் பெய்யும் தொடர் கனமழையின் காரணமாக காவிரி படுகையில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் போன்ற அணைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு முழு கொள்ளவை எட்டியது. கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதை அடுத்து அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கர்நாடகா அரசு உபரி நீரை காவிரி ஆற்றில் வெளியேற்றி வருகிறது.

இதன் எதிரொளியாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மலமளவென உயர்ந்து தற்போது முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இந்நிலையில் காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி மற்றும் ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு மேட்டூர் அணை நீரை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு இரண்டு தினங்களுக்கு முன்னர் மேட்டூர் அணையை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக நீர் திறக்கப்பட இருப்பதால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் நேற்று மாயனூர் கதவனுக்கு வந்தடைந்த நிலையில் இன்று திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது. முக்கொம்பு அணைக்கு காவிரியில் தண்ணீர் வந்ததை அடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அயிலை சிவசூரியன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல்மணிகளையும், மலர்களையும் தூவி வரவேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision