ரியல் எஸ்டேட் செய்து வருபவரை அடித்துக் கொலை செய்த வழக்கில் மேலும் மூன்று பேர் சரணடைந்தனர்

திருவெறும்பூர் அருகே ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவரை அடித்து கொலை செய்து வழக்கில்இரண்டு பேர் திருச்சி நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் சரணடைந்த நிலையில் மேலும் முக்கிய குற்றவாளி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் பெரியார் தெரு அம்மா குளம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (64) இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் பொன்ராஜிற்கு காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் உள்ள தெரிந்தவர் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதாகவும் அப்படி 10 ஆம் தேதி இரவு வந்துவிட்டு திரும்ப சென்ற பொழுது பொன்ராஜ் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்துடன் உடலில் காயத்துடன் விழுந்து கடந்த வரை அப்பகுதி மக்கள் பொன்ராஜை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அங்கு சிகிச்சைக்கு பலன் இல்லாமல் பொன்ராஜ் பறிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் பொன்ராஜ் உடலில் இருந்த காயங்கள் சாலை விபத்தினால் ஏற்பட்ட காயங்கள் போல் தெரியவில்லை என்றும் அது யாரோ பொன்ராஜை அடித்து கொலை செய்திருக்கலாம் அவரது மகனும் திமுக கட்சியின் 37 வது வார்டு இளைஞரணி அமைப்பாளருமான சுந்தர்ராஜ் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில்.
திருவெறும்பூர் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தப்போது பொன்ராஜை சிலர் தாக்குவது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் பொன்ராஜின் மருமகளுடன் அரியமங்கலம் முத்துநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் நிஷாந்த் ( 27 ) என்பவனுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாகவும் அதனை பொன்ராஜ் கண்டித்ததாகவும் அதனால் பொன்ராஜை நிஷாந்த் மற்றும் அவனது கூட்டாளிகள் தாக்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து நிசாந்தையும் அவன கூட்டாளிகளானதிருநெடுங்களம் வடக்கு தெரிவை சேர்ந்த நாராயணசாமி மகன் பாரதிராஜா (24) அரியமங்கலம் அம்மா குளத்தைச் சேர்ந்த நல்ல முத்து மகன் சந்தோஷ்குமார் (18 ) சிலரையும் பிடித்து விசாரணை செய்து வந்த நிலையில் நேற்று திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு சம்பந்தமாக ஸ்ரீரங்கம் அடைய வளைஞ்சான் வீதியைச் சேர்ந்த மகேந்திரன் மகன் பிரசன்னா (20) ஸ்ரீரங்கம் வடக்கு வாசலை சேர்ந்த ரங்கராஜ் மகன் குணசேகர் (21) ஆகிய இரண்டு பேரும் திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
இதனால் பொன்ராஜ் இறப்பு கொலை தான் என்பது உறுதியாகியது.நிஷாந்திடம் எதற்காக பொன்ராஜை கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்கினீர்கள் என கேட்டதற்கு பொன்ராஜ் மருமகளுடன் தனக்கு இருந்த தொடர்பை தெரிந்து கொண்டு கண்டித்ததோடு தன்னை பார்க்கும் போதெல்லாம் திட்டி வந்ததாகும் இதனால் ஆத்திரமடைந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து பொன்ராஜை தாக்கி விட்டு சென்றதாகவும் இந்த நிலையில் தான் பொன்ராஜ் இறந்து விட்டார் எனவும் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
அதன் அடிப்படையில் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.ஏற்கனவே இரண்டு பேர் திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்து நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision