பல கோடி ரூபாய் மோசடி செய்த எல்பின் நிறுவன நிர்வாக இயக்குனர் ரமேஷ் கைது

பல கோடி ரூபாய் மோசடி செய்த எல்பின் நிறுவன நிர்வாக இயக்குனர் ரமேஷ் கைது

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாட்டில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் பாண்டிச்சேரி முதலியவற்றில் இயங்கிவந்த ELFIN என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தனர். பண இரட்டிப்பு மற்றும் நிலம் தருவதாக பல்வேறு பொய் அலங்கார வெற்று வாக்குறுதிகள் வழங்கி அதிக லாபம் தருவதாக பொதுமக்களிடம் கூறி

பொது மக்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பித்தராமல் ஏமாற்றி ELFIN E-Com Pvt Ltd, Sparrow Global Trade Trichy, Varagamani Pvt., Chennnai, JB Orient Tech Marketing India Pvt Ltd., Madural, RM Wealth Creation Pvt Ltd., Coimbatore and Infy Galaxy Marketing India Pvt Ltd., Chennai மற்றும்

இதைச் சார்ந்த அறம் மக்கள் நல சங்கம் டிரஸ்ட், அறம் டிவி சேனல், தமிழ் ராஜ்ஜியம் செய்தித்தாள் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக திருச்சி, தஞ்சாவூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதநகர், பெரம்பலூர், கோயம்புத்தூர், சென்னை ஆகிய 10-த்திற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வழக்குகள் கடந்த பல்வேறு காலகட்டங்களில் பதியப்பட்டிருந்தன.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதலின் பேரில் காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. சென்னை பொருளாதார குற்றப்பிவு கூடுதல் இயக்குனர் அபின் தினேஷ் மொடக் உத்தரவின் பேரில் இவ்வழக்குகளில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த முக்கிய எதிரியான எல்பின் நிறுவன நிர்வாக இயக்குனர் ரமேஷ்குமார் என்பவரை கைது செய்தனர்.  

இதனை தொடர்ந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த  நீதித்துறை சிறப்பு நீதிபதி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலபாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டர். நிதி மோசடி வழக்கு எதிரி ரமேஷ்குமாரை நீதித்துறை சிறப்பு நீதிபதி உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn