திருச்சி மாநகரில் சாலையில் பிச்சை எடுப்பவர்களை மீட்டு காப்பங்களில் ஒப்படைப்பு.

திருச்சி மாநகரில் சாலையில் பிச்சை எடுப்பவர்களை மீட்டு காப்பங்களில் ஒப்படைப்பு.

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் ஆதரவற்ற நிலையில் முக்கிய சந்திப்புகள், சிக்னல்கள் மற்றும் சாலையில் பிச்சை எடுத்து வருவர்களை மீட்டு காப்பங்களில் ஒப்படைக்க திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், போக்குவரத்து உதவி ஆணையர் மற்றும் சரக உதவி ஆணையர்களுக்கு உரிய அறிவுரை வழங்கியுள்ளார்.

அதன்படி, திருச்சி மாநகரத்தின் முக்கிய பகுதிகளான ரயில்வே சந்திப்பு, மத்திய பேருந்து நிலையம், ரெயில்வே ஜங்சன் பேருந்து நிலையம், அரிஸ்டோ ரவுண்டானா, ஆகிய இடங்களில் ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுத்து வருபவர்கள் மற்றும் தெருவோரம் சுற்றித்திரியும் நபர்களில் 7 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் மீட்கப்பட்டனர். அவ்வாறு மீட்கப்பட்டவர்களை திருச்சி மாநகரில் உள்ள மறுவாழ்வு காப்பங்களில் நல்லமுறையில் ஒப்படைக்கப்பட்டார்கள்.

திருச்சி மாநகரில் இதுபோன்று ஆதரவற்ற நிலையில் முக்கிய சந்திப்பு சிக்னல்கள் மற்றும் சாலையில் பிச்சை எடுத்து வருபவர்களை அவர்களின் மறுவாழ்விற்காக தொடர்ந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, காப்பங்களில் ஒப்படைக்கப்படுவர்கள் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision