நாளை முதல் புதிய பதிவு கட்டணம் பத்திரப்பதிவு பாதிக்கும்... கிரடாய் அச்சம்

நாளை முதல் புதிய பதிவு கட்டணம் பத்திரப்பதிவு பாதிக்கும்... கிரடாய் அச்சம்

மக்கள் எல்லோரின் கனவும் வாழ்க்கையில் ஒரு வீடாவது சொந்தமாக வாங்கிவிடவேண்டும் என்பது. இந்நிலையில் தமிழக அரசு பத்திரப்பதிவு துறை பதிவு கட்டணத்தில் மாற்றங்களை அறிவித்துள்ளது. நாளை (1ம் தேதி) முதல் இந்த கட்டண மாற்றம் அமலுக்கு வருகிறது. இந்த கட்டண மாற்றத்தால் அடுக்குமாடி வீடு விலை குறையும் என்ற ஒரு தகவல் பரவி வருகி றது. ஆனால் அதில் உண்மையில்விலை மாறாக அதிகரிக்கும், இதனால் வீடு விற்பனை குறைய வாய்ப்புள்ளதாக கிரடாய் திருச்சி தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.  புதிய கட்டண மாற்றம் டிசம்பர் 1ம் தேதி முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பத்திரப்பதிவு கட்டணம் அதிகரித்துள்ளது.

ஏற்க னவே கடந்த ஜூலை மாத கட்டண மாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பை விட இப்போது கூடுதல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. விற்பனை பாதிக்கப்படும் என்பதால் கட்டுமான நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த ஜூலை மாதம் 10ம் தேதிக்கு முன் வரை நிலத்தின் மதிப்பில் 9 சதவிகிதமும், கட்டட மதிப்பில் 2 சதவிகிதம் பதிவு கட்டணமாக நிர்ண யிக்கப்பட்டிருந்தது . ஜூலை 10ம் தேதிக்கு பிறகு நிலமதிப்பில் 9 சதவிகிதமாகவும், கட்டட மதிப்பில் 4 சதவிகிதமும் என பதிவு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை (1ம்தேதி ) அமலுக்கு வரும் கட்டண மாற்றம் ஒட்டுமொத்தமதிப்பில் 6 சதவிகிதம் பதிவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூலை 10ம் தேதிக்கு முன் ரூபாய் 1.43 லட்சம் பதிவு கட்டணம் செலுத்திய ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டுக்கு ஜூலை 10ம் தேதிக்கு பிறகு ரூபாய் 2.29 லட்சம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இப்போது டிச. 1ம்தேதிக்கு பிறகு அதே அளவு கொண்ட ஒரு குடியிருப்பு வீட்டுக்கு பதிவு கட்டணமாக ரூபாய் 2.96 லட்சம் செலுத்த வேண்டும். இது 50 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட குடியிருப்பு வீட் டுக்கு மட்டும் பொருந்தும் இதுவே 50 லட்சத்துக்கும் மேல் விலை கொண்ட குடியிருப்பு வீடுகளுக்கு ஜூலை 10ம் தேதிக்கு முன் ரூபாய் 1.68 லட்சம் பதிவு கட் டணம் செலுத்தியிருந்தால், இப்போது ரூபாய் 4 லட்சம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வீடு விற்பனை பெரியளவில் பாதிக்கப்படும்", என்பதோடு பத்திரப்பதிவுத்துறையின் வருமானமும் படுத்துவிடும் என்கிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision