மத்திய பேருந்து நிலையத்தில் இறந்தவரை நல்லடக்கம் செய்த காவல்துறையினர் மற்றும் அறக்கட்டளையினர்

மத்திய பேருந்து நிலையத்தில் இறந்தவரை நல்லடக்கம் செய்த காவல்துறையினர் மற்றும் அறக்கட்டளையினர்

Advertisement

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அறியப்படாத பலர் ஆதரவற்று கிடைத்த உணவை உண்டு சாலையோரம் வாழ்ந்து வருகிறார்கள். பலர் வயோதிக காலத்தில் வீட்டிலிருந்து வீதிக்கு வந்து விடுகிறார்கள். முதுமைக்கே உரிய தள்ளாமை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள இவர்கள் ஆதரவற்றோராக சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். நிற்க முடியாமல், உட்கார முடியாமல் மழை, வெயில், குளிர் என பல்வேறு சீதோசன நிலைகளிலும் சாலையோரங்களில் படுத்துக் கிடக்கின்றனர்.   

Advertisement

இவர்களுக்கு ஏற்படும் வலியும் வேதனையும் கொடுமையானது. இவ்வாறு அவதிப்படும் முதியவர்களை கண்டும் காணாமலும் கடந்து செல்கிறோம். இவ்வாறு பிறரிடம் யாசகம் கேட்டு சுற்றித்திரிந்த பெயர், விலாசம் அறியப்படாத நபர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மத்திய பேருந்து நிலையம் அருகே 21-3-2021 அன்று இறந்துவிட்டார். அவரது பிரேதம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. இறந்தவர் குறித்து விசாரிக்கையில், 

Advertisement

காவல்துறையினர் இறந்தவரின் புகைப்படத்தை காட்டி இறந்த நபரை பற்றி விசாரிக்கையில் எந்தவிதமான முகாந்திரமும் கிடைக்கவில்லை மேற்படி இறந்த நபரை பற்றி விசாரிக்க இவர் நீண்ட நாட்களாக மத்தியபேருந்து நிலையம் பகுதியில் இலவசமாக கொடுத்த அன்னதான உணவுகளை உண்டு ஜீவனம் செய்து வந்துள்ளதாக தெரிய வருகிறது.

மேற்படி இறந்த நபரை பற்றி யாரும் தேடி வராத காரணத்தினாலும் மேலும் மேற்படி இறந்தவரின் இறப்பில் எவ்வித சந்தேகமும் இல்லை என விசாரணையில் தெரிய வருகிறது. அவரை ஆதரிக்க யாரும் இல்லாத நிலையில் உடல் நலம் குன்றி இறந்து விட்டார் என்பதும் தெரியவந்தது. மேற்படி நபர் குறித்து பற்றிய விவரங்களை அறிய அனைத்து முயற்சிகளை மேற்கொண்டும் அவரது விலாசம் அறிய முடியவில்லை என்பது காவல்துறை மூலம் தெரியவந்துள்ளது. அவரது பிரேதத்தை உடற்கூறு ஆய்வு செய்து பிரேதத்தை நல்லடக்கம் செய்ய திருச்சிராப்பள்ளி கண்டோன்மெண்ட் சட்டம் ஒழுங்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமாருக்கு 26-3--2021 அன்று தகவல் அளித்ததன் அடிப்படையில் மகாத்மா காந்தி நினைவு பொது மருத்துவமனை பிரேத கிடங்கில் இருந்து கண்டோன்மெண்ட் சட்டம் ஒழுங்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் உடன் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் , யோகாசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் பிரேதத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து திருச்சிராப்பள்ளி தென்னூர் அண்ணா நகர் குலிமிகரை மயானத்தில் 26-3-2021 அன்று மதியம் நல்லடக்கம் செய்தனர்.

Advertisement

நல்லடக்க நிகழ்வில் யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அமிர்தம் சமூகசேவை அறக்கட்டளை சார்பில் யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியினர் ஆதரவற்றவர்களுக்கு உதவும் வகையில் வருடம் முழுவதும் உண்ண உணவும் உடுத்த உடையும் வழங்கி வருகிறார்கள். மேலும் தெருவோர நாய்களுக்கும் பிற ஜீவராசிகளுக்கும் உணவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.அனாதைப் பிணங்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட புகைப்படம் ஒளி ஒலிப் பதிவுகளை ஆவணமாக பொது அறிவிப்பாக வெளியிடப்படுகிறது.