திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பட்டூர் ஊராட்சியில் அமைந்துள்ள  பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக  நடைபெற்றது.


            திருப்பட்டூர் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு பிரம்மசம்பத் கௌரி உடனாய பிரம்மபுரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்ட விழாவிற்க்காக  கொடியேற்றம் இம்மாதம் 19 ம்  தேதி காலை 6 மணிக்கு பூர்வாங்க  பூஜைகள், கணபதி ஹோமம், ரிஷப யாகம் உள்ளிட்ட பூஜைகளை கோயில் சிவாச்சாரியர்கள் செய்து, கோயில்  கொடி மரத்தில் பிரம்மபுரீஸ்வரர் படம் பொருந்திய கொடியினை ஏற்றினர்.


         இதனைத் தொடர்ந்து 2 ம் நாளில் சுவாமி பூத வாகனம், மயில் வாகனத்திலும், 3 ம் நாள் கைலாச மற்றும் அன்னவாகனத்திலும், 4  ம் நாள் சேஷ  மற்றும் மயில் வாகனத்திலும், 5 ம் நாள் தனித்தனி வாகனங்களில்  பஞ்சமூர்த்தி புறப்பாடும், 6 ம் நாள் யானை வாகனம் மற்றும் புஷ்ப பல்லாக்கிலும், 7 ம் நாள் கற்பக விருட்சம் மற்றும் காமதேனு வாகனத்திலும், 8 ம் நாள் குதிரை வாகனப் பல்லாக்கிலும் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

முக்கிய நிகழ்வான 9 ம் நாளான  27 ம் தேதி பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. தேரில் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் சம்பத் கௌரி அமர்ந்திருந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  தேர் நான்கு வீதிகள் வழியாக சென்று கோயில் நிலையினை அடைந்தது.

          இத்தேரோட்டத்தில்  திருப்பட்டூர், எம்.ஆர். பாளையம், சணமங்கலம், பெரகம்பி, வலையூர், பாலையூர், சிறுகனூர், கொணலை உள்ளிட்ட கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர் விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வீ. முத்துராஜ், கோயில் சிவாச்சாரியர் பா. பாஸ்கர், கோயில் கணக்கர் வெ. பிரசன்னா மற்றும்  கோயில் பணியாளர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW