மகளிர் உரிமைத் தொகை வதந்தி - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்.

மகளிர் உரிமைத் தொகை வதந்தி - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்.

மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக தகவல் பரவியது. இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால் அன்று அது போன்ற முகாம் நடைபெறவில்லை என்றும், அது வெறும் வதந்தியே என்று அறிவிக்கப்பட்டதால் பெண்கள் ஆத்திரமடைந்தனர்.

இதுபோன்ற பொய்யான தகவல்கள் பரப்பி பொதுமக்களை அலைக்கழிப்பவர் மீது மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், whatsapp தகவல் பெறும் வதந்தி என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப்பில் பரவி வரும் புகைப்படத்தை யாரும் நம்ப வேண்டாம். மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு முகாம் ஏதும் நடைபெறவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision