திருச்சியில் டாட்டூ சென்டர்கள் கணக்கெடுப்பு !!

திருச்சியில் டாட்டூ சென்டர்கள் கணக்கெடுப்பு !!

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி சிந்தாமணி பஜார் பகுதியில் டாட்டூ சென்டர் நடத்தி வந்த ஹரிஹரன் என்பவர் சட்டவிரோதமாக நாக்கை பிளவுபடுத்தியதுடன், அதில் டாட்டூ போட்டதுடன் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டார். 

இந்த விடியோவை பார்த்து திகைத்த மருத்துவத்துறையினர் புகாரளித்த நிலையில் திருச்சி கோட்டை காவல்நிலையத்தில் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஹரிஹரன் மற்றும் அவர் நண்பரை கைது செய்ததுடன், டாட்டூ சென்டரை பூட்டி சீல் வைத்தனர்.

தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரனிடம் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி முதல்வருடன் சுகாதார துறை இணை இயக்குனர் உட்பட ஐந்து பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொள்ள சிறை நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளனர். 

மேலும் டாட்டூ சென்டர்களின் உரிமம் குறித்தும், மருத்துவ நெறிமுறைகளை பின்பற்றுகிறார்களாக என்பதை சரி பார்க்கவும் டாட்டூ சென்டர்களை கணக்கெடுக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார துறையினர் மேற்கொண்டுள்ளனர். கணக்கெடுப்பு முடிந்ததும் மருத்துவ குழுவினர் மூலம் ஆய்வு நடத்தப்படும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision