நிலத்தடி வடிகால் திட்டத்தால் சேதமடைந்த சாலைகள் - போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

நிலத்தடி வடிகால் திட்டத்தால் சேதமடைந்த சாலைகள் - போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருச்சி கே.சாத்தனூர் மற்றும் உடையான்பட்டி பிரதான சாலை (வார்டு 63) பகுதியில் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலத்தடி வடிகால் (UGD) திட்டம் காரணமாக சாலையின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இது காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கும், விபத்து அபாயங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

இந்த சாலைகளில் பெரிய குழிகள், சமநிலை இல்லாத தரை, மற்றும் சேரும் சகதியுமாக உள்ளது. மோசமான நிலைமையால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அதிக சேதங்கள் ஏற்படுகின்றன. தினசரி பயணங்கள் மற்றும் அவசர உதவிகள் தடைபடுகின்றன. குறிப்பாக பல மாதங்களாக பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில்பல்வேறு அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பு தொடர்ந்து அதிகாரிகளிடம் முறையிட்டும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், எதிர்ப்பை வெளிப்படுத்த சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து இன்று (21.12.2024) உடையான்பட்டி ரெயில்வே கேட் அருகில் 100க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சாலையின் உடனடி மதிப்பீடு செய்து, சீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுப்பது. திட்டத்தின் முன்னேற்றம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் அளிப்பது.

சாலை புதுப்பிப்பு செய்யப்படும் என உறுதி அளிப்பது. பேருந்து சேவை தொடர நடவடிக்கை எடுக்க உறுதி அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்த கே.கே.நகர் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision