UPI பரிவர்த்தனை வரம்பு உயர்த்தப்பட்டது புதிய விதிகள்!!

UPI பரிவர்த்தனை வரம்பு உயர்த்தப்பட்டது புதிய விதிகள்!!

சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளுக்கான கட்டணம் செலுத்துவதற்கான UPI பரிவர்த்தனை வரம்பை தற்போதைய ரூபாய் ஒரு லட்சத்தில் இருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. RBI, ஹெல்த்கேர், கல்விப் பிரிவுகளுக்கான UPI கட்டண வரம்பை ரூபாய் ஒரு லட்சத்தில் இருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெள்ளிக்கிழமை மருத்துவமனைகள் போன்ற மருத்துவப் பிரிவுகளுக்கும், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் போன்ற கல்வி வசதிகளுக்கும் கட்டணம் செலுத்துவதற்கான யுபிஐ வரம்பை தற்போதைய ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழமையன்று மீண்டும் மீண்டும் பணம் செலுத்துவதற்கான மின்-ஆணைகளுக்கு புதிய வரம்புகளை அறிவித்தார். "இது நுகர்வோர் கல்வி மற்றும் சுகாதார நோக்கங்களுக்காக அதிக அளவு UPI செலுத்துவதற்கு உதவும்" என்றும் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision