நீட் தேர்வில் திருச்சி மலைவாழ் மாணவர் சாதனை

நீட் தேர்வில் திருச்சி மலைவாழ் மாணவர் சாதனை

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சைமலை பகுதியில் வசிக்கும் பழங்குடி இன மாணவர் தமிழகத்திலேயே

பழங்குடியினர் மாணவர்களில் தர வரிசையில் மருத்துவ நுழைவு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற உள்ளார். பச்சைமலை பூதக்கால் பகுதியில் வசிப்பவர் ராஜகோபால் - சின்னக்காள் இவர்களது மகன் சந்திரன்.

இவர் டாப் செங்காட்டுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவருடன் 69 பழங்குடி மாணவ - மாணவிகள் படித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு இவர் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவில் மாவட்டத்திலேயே முதல் மாணவனாக வெற்றி பெற்றார்.

அதனை தொடர்ந்து அவர் மருத்துவம் படிபதற்க்காக நீட் நுழைவு தேர்வு எழுதியுள்ளார். நீட் தேர்வில் தற்போது பழங்குடி மாணவர்களிலேயே மாநிலத்தில் முதல் மாணவனாக தரவரிசையில் வெற்றி பெற்றுள்ளார். 

இவரது பெற்றோர்கள் தனது மகன் மருத்துவர் படிப்பிற்கு வெற்றி பெற்றதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவனை வெகுவாக பாராட்டினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision