திருப்புமுனை தருமா திருச்சி : அண்ணாமலை நடைபயணம் திகிலில் திமுக ! மகேஷா ? நேருவா ?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டசபை தொகுதி வாரியாக ”என் மண் என் மக்கள்” என்ற பெயரில் நடைப யணம் மேற்கொண்டு வருகிறார். திருச்சி மாவட்டத்தில் இப்பயணத்தை அவர் நேற்று (05.11.2023) மணப்பாறை தொகுதியில் இருந்து தொடங்கினார். தொடர்ந்து, நாளை முதல் 2 நாட்களுக்கு திருச்சி மாநகரில் யாத்திரை மேற்கொள்ள உள் ளார். ஸ்ரீரங்கம் தொகுதியில் நாளை மாலை 3.30 மணிக்கு திருவானைக்காவல் நாலுகால் மண்டபத்தில் யாத்திரையை தொடங்கும் அண்ணாமலை, திருவானைக் காவல் தெப்பக்குளம், ஸ்ரீரங்கம் மேம்பாலம், தேவி தியேட்டர், ஸ்ரீரங்கம் பஸ்ஸ்டாண்ட் வழியாக ராஜகோபுரம் முன்பு நிறைவு செய்து மக்களிடையே உரையாற்றுகிறார்.
நாளை மறுநாள் (8ம் தேதி) திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு தொகுதியில், மாலை 3.30 மணிக்கு உறையூர் நாச்சியார் கோயிலில் பயணம் தொடங்குகிறது. அங்கிருந்து உறையூர் பஜார், கே.டி.தியேட்டர், மாரிஸ் மேம்பாலம், மலைக்கோட்டை வளைவு, மேலப்புலிவார் டுரோடு, தேவர்ஹால், மரக்கடை எம்ஜிஆர் சிலை வழியாக காந்தி மார்க்கெட்டில் நிறைவு செய்து அங்கு மக்களிடையே உரையாற்றும் வண்ணம் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது,
7ம் தேதி திருவெறும்பூர் தொகுதியிலும், 9ம் தேதி லால்குடி, மண்ணச்சநல்லுார் ஆகிய தொகுதியிலும் அண்ணாமலையின் மக்கள் யாத்திரை யாத்திரை நடைபெற உள்ளது. திருவெரம்பூர் அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதி, திருச்சி மேற்கு அமைச்சர் கே.என்.நேருவின் தொகுதி அண்ணாமலை பிரச்சாரத்தை நிறைவு செய்யும் நவம்பர் 9ம்தேதி கே.என். நேருவின் பிறந்தநாள் அன்றைய தினம் திருச்சி மாவட்டம் லால்குடியில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார் அண்ணாமலை பிறந்த நாள் பரிசாக என்ன அளிக்கப்போகிறார் யாருக்கு அளிக்கப்போகுகிறார் என காத்துக்கிடக்கிறார்கள் பாஜகவினர்.
வெறும் அவிலை மெல்லும் அண்ணாமலைக்கு நல்ல தீனி கிடைத்ததுள்ளது. ஆனால் காவல்துறையினரோ அது வெடிகுண்டு அல்ல வெங்காய வெடி. தீபாவளி சீசன் என்பதால் வெங்காய வெடியை வீசிவிட்டு சென்றுள்ளனர் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் பட்டாசு வியாபரிகளோ தடை செய்யப்பட்ட வெங்காய வெடி இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது என கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த வெடி வீசப்பட்ட இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் தான் நாளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது