"நேர்மை கடை" - திருச்சி கல்லூரியில் புதுவித முயற்சி!!

"நேர்மை கடை" - திருச்சி கல்லூரியில் புதுவித முயற்சி!!

Advertisement

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நேர்மை இருக்கிறது. அதனை வெளிப்படுத்துவதற்குத்தான் நாம் அவ்வப்போது தவறிவிடுகிறோம். "நேர்மை, ஒரு விலை உயர்ந்த பரிசு, அதனை மலிவானவர்களிடம் எதிர்பார்க்கக்கூடாது" என்பார் அமெரிக்க கோடீஸ்வரரான வாரன் பஃபெட்.

Advertisement

அந்த வகையில் திருச்சியில் நூற்றாண்டுகள் பாரம்பரியமிக்க கருமண்டபத்தில் உள்ள தேசிய கல்லூரியில் புதுவித முயற்சியாக நேர்மை கடை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு முதற்கட்டமாக நேர்மை என்பதை சிறு வயதிலேயே விதைக்கும் வகையில் "Honesty Shop" நேர்மை கடை‌ ஒன்றை கல்லூரி வளாகத்திற்குள்ளேயே உருவாக்கியுள்ளனர். இந்த நேர்மையின் கடையில் எழுதுபொருட்கள், பேனா மாணவர்களுக்கு தேவையான அனைத்தும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி தேசிய கல்லூரி மற்றும்‌ JCI அமைப்பின் சார்பாக கல்லூரி இனி வரும் காலங்களில் இந்த நேர்மையின் கடை செயல்பட இருப்பதாகவும், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தாங்களாகவே வந்து பணத்தை அங்குள்ள பெட்டியில் போட்டுவிட்டு தங்களுக்கு உரிய பொருள்களை எடுத்துச் செல்லலாம் என தெரிவித்தனர்.

Advertisement

இதுகுறித்து பேசிய கல்லூரி முதல்வர் சுந்தரராமன்... "நேர்மையின் அடையாளமாக திறக்கப்பட்டுள்ள இந்த நேர்மை மார்க்கெட் இனி வரும் காலங்களில் தொடர்ந்து செயல்படும் என்றும், சமீபத்தில் கல்லூரி வளாகத்தில் கடந்த இரண்டு பர்சுகளை மாணவர்களுக்கு என்னிடம் எடுத்து வந்து கொடுத்தனர். இதன் மூலமாகத்தான் இந்த நேர்மையின் கடை திறக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்"

Advertisement