இந்தியாவிலேயே திருச்சியில் மட்டும் விளையாடும் விளையாட்டு இது! நீங்கள் விளையாடியுள்ளீர்களா?

இந்தியாவிலேயே திருச்சியில் மட்டும் விளையாடும் விளையாட்டு இது! நீங்கள் விளையாடியுள்ளீர்களா?

ஒவ்வொரு ஊர்களுக்கும் ஒவ்வொரு பெருமையும் வரலாற்றுச் சிறப்புகளும் தொன்றுதொட்டு வந்து கொண்டேதான் இருக்கும். அந்த வகையில் ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடங்கி இன்றும் திருச்சி பொன்மலையில் மட்டும் வேறும் எங்கும் பார்க்க முடியாத கட்டை பேட் (கட்டை பூப்பந்தாட்டம் ) விளையாடி வருகின்றனர். இதற்கு பல காரணங்களும் உண்டு. அவற்றை உங்களுக்கு விளக்குகிறது திருச்சி விஷன் இணையதளம்!

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் அவர்கள் தங்கியிருந்த இடங்களில் ஒன்று பொன்மலை. அவர்கள் ஒய்வு நேரத்தில் ஹாக்கி, கால்பந்து, போன்ற பல விளையாட்டுகளுடன் பூப்பந்தாட்டம் ஒன்று. வலையில் செய்யப்பட்ட மட்டையைக் கொண்டு பூப்பந்து விளையாடுவார்கள். அதைப் பார்த்த அந்நாளைய திருச்சிக்காரர்களுக்கு (பொன்மலை) தாங்களும் ஆட வேண்டுமென்ற ஆசை பிறந்தது. ஆனால் அதிக விலை கொடுத்து வலையினால் செய்யப்பட்ட பேட் பந்தை வாங்க முடியாத சூழலில் , துணியைச் சுருட்டி பந்தாக்கி அட்டையை மட்டையாக்கி தட்டி விளையாடத் தொடங்கினார்கள். நாளாக நாளாக மரக் கட்டையை பேட்டாக வடிவமைத்து பூப்பந்து விளையாடுவது இங்கு புகழ் பெறத் தொடங்கியது.இதற்கு கட்டை பேட்டில் பூ பந்தை கொண்டு விளையாட தொடங்கினார்கள்.

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5 Trichy Vision Whatsapp
We invite you to work together!

இந்த பேட்டை பிளைவுட் பலகை கொண்டு செய்து விளையாடுகிறார்கள்.
விளையாட்டு போது அந்த கட்டை பேட்டில் படும் பொழுது எழும் ஒசை பார்ப்பவருகளுக்கு உற்சாகமாக இருக்கும். ஒரு காலத்தில் பொன்மலையில் வசித்த, வாழ்ந்த இளைஞர்களில் கட்டை பேட்டு விளையாடாதவர்களே இருக்க மாட்டார்கள். பொன்மலை ரயில்வே காலனியில் "டி"டைப், "சி" டைப் , " F" டைப் ,சந்தை அருகில் என ஒவ்வொரு குடியிருப்பு அருகிலும் கட்ட பேட் (கிரவுன்ட்) மைதானம் கட்டாயம் இருக்கும். இதில் இரட்டையர் , ஐவர், அணி ஆட்டம் இருக்கும் .இதில் 5வர் அணி ஆட்டம் பிரமாதமாய் இருக்கும்.

இங்கு வருடத்திற்கு ஒருமுறை கட்ட பூப்பந்தாட்டப் போட்டிகள் நடக்கின்றன. இதற்கென தனி விளையாட்டு கிளப்புகளும் உள்ளன.ஏன் இந்தியாவிலேயே பொன்மலையில் மட்டும் தான் விளையாடப்படும் விளையாட்டு இது! இந்த கட்டை பூப்பந்தாட்டத்திற்கு ஏராளமான ரசிகர்களும் உண்டு.அந்த வகையில் நம் திருச்சியின் பாரம்பரியமிக்க இந்த விளையாட்டை பலரும் விரும்பி விளையாடி வருகின்றனர் என்பதில் ஐயமில்லை. இந்தியாவிலேயே பாரம்பரியத்தை காக்கும் விளையாட்டாக இன்றளவும் விளையாடி உடல் நலத்திற்கும் உற்சாகமாக விளையாடி வருகின்றனர் பொன்மலை பகுதியினர்!