ஊழலை தடுப்பதே நோக்கம் - தேசிய ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவின் அறிமுகம்!!

ஊழலை தடுப்பதே நோக்கம் - தேசிய ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவின் அறிமுகம்!!

தனக்கு ஒரு வேலை ஆக வேண்டும், அதற்கு அதிகாரத்தில் இருக்கும் தனி மனிதன் மகிழும் வண்ணம் ஏதேனும் செய்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தின் அடிப்படையில் உருவான ஊழலுக்கு காலத்தின் அடிப்படையில் வயது இல்லை. பண்டமாற்று முறைகள் இருந்த போதும் சரி, தற்போது காகித பணத்தை மறந்து போனிலேயே பணத்தை பரிமாறி கொள்ளும் முறை வந்தபின்னும் சரி வித விதமான முறைகளில் ஊழல்கள் பெருகி கொண்டே தான் உள்ளது.

இதனால் நாட்டின் வருமானம் பாதிக்கப்படுவது, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு என பல பிரச்னைகளும் ஏற்படுகிறது. ஊழலை ஒழிப்பதே நாட்டிற்கு, அரசிற்கு, மக்களுக்கு நல்லது என்ற நிலையில் நாடு முழுவதுமே ஊழலை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழு இயங்கி வருகிறது. இக்குழுவின் தென்னிந்திய தலைவரான திருச்சி காட்டூரை சேர்ந்த சக்தி பிரசாத், தேசிய ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவின் அறிமுகம் மற்றும் நோக்கத்தை விளக்குகிறார்.

ஊழலை பொறுத்தவரை உயர்நிலை அதிகாரிகளில் ஆரம்பித்து கடைநிலை ஊழியர்கள் வரை பல நிலைகளில் உள்ள அரசு மற்றும் தனியார் துறைகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவின் மூலம் அதனை தடுப்பதற்கு பல வருடங்களாக போராடி வருகிறோம். எத்தனை வகையில் ஊழல்கள் பண்ண முடியுமோ அத்தனை வகைகளில் பல யூகங்களை வகுத்து ஊழலை ஒழிக்க முற்படுகிறோம்.

கூடவே ஊழலினால் ஏற்படும் எதிர்மறை பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு செய்வது, ஊழல் செய்பவர்களுக்கு எதிராக தண்டனை பெற்று தருவது என ஊழலுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றவர், தொடர்ந்து 

ஊழல் இல்லாத ஆட்சி மட்டுமே நல்ல ஆட்சியாகும். அதிகாரத்தில் இருப்பவர்களும், அரசியல்வாதிகளும் தங்களை நேர்மையாக, வெளிப்படையாக காட்டிக்கொள்ளும் போது ஊழல் குறையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கூடவே அதிகாரத்தின் கடைசி நிலையில் இருப்பவர்கள், மேல்நிலையில் இருப்பவர்கள் என்றில்லாமல் யாரிடமேனும் ஒரு சிறு நேர்மை குறைபாடு தெரிந்தாலும் உடனடியாக அங்கு நம்பக தன்மையை பரிசோதிப்பது அவசியம்.

ஊழலை குறைப்பது எப்படி என்றவரிடம் ‘எப்படி ஊழலை குறைக்க முடியும் என்பதை பற்றி குறிப்பிட்டுள்ள தேசிய ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழு, ஊழல் குறித்த அனைத்து விளைவுகளையும் எடுத்துரைக்கும் கல்வியை அனைவரிடமும் கொண்டு போய் சேர்ப்பதை முக்கியமாக கூறுகிறது. மேலும் பொருளியலர் ராபர்ட் கிளிட்கர்ட் தியரியான ஊழலில் ஈடுப்பட்டவர்களுக்கு பெரும் தண்டனையையும், கூடவே அவர்கள் பெற்ற ஊழலை விட அதிக அபராதத்தையும் விதிப்பதும் ஊழலை கட்டுக்குள் கொண்டு வர உதவும்‘ என குறிப்பிட்டுள்ளதையும் தெரிவித்தார். 

ஊழல் விழிப்புணர்வு தொடரும்!!

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision