மூன்று மாதங்களில் விசாரணையை முடிங்கப்பா - செபிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் குறித்து சர்ச்சையை கிளப்பியது அமெரிக்காவின் ஹிட்டன்பர்க். இதனைத்தொடர்ந்து அதல பாதாளத்திற்கு சென்றது அதானி குழும பங்குகளின் விலை. இதனைத்தொடர்ந்து எதிர்கட்சிகளை நாடாளுமன்றத்தை முடக்கிய நிகழ்வுகளும் அரங்கேறின. இதுகுறித்து விசாரணை செய்து செபி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. செபி விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுதே இந்த வழக்கை செபியிடம் இருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன.
இந்நிலையில் தாங்கள் விசாரித்து வரும் நிலையில் வழக்கிற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. தீர்ப்பை அடுத்து, கவுதம் அதானியும் "எக்ஸ்" தளத்தில் உண்மை வென்றதாக பதிவிட்டுள்ளார். தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, நவம்பர் 24ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது. அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்பாக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (SEBI) அனுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அதிருப்தி தெரிவித்தார்.
மூன்றாம் தரப்பு அறிக்கைகளை உறுதியான சான்றாகக் கருத முடியாது என்று பெஞ்ச் கூறியது. அதானி குழுமத்தின் பங்குகள் ஹிண்டன்பர்க்கின் கட்டுரையால் உச்சத்தில் இருந்து சுமார் 80 சதவிகிதம் வரை சரிந்த பிறகு சற்றே மீண்டுள்ளது. அதானி போர்ட்ஸ் போன்ற பங்குகள் அனைத்து ஹிண்டன்பர்க் இழப்புகளையும் மீட்டெடுத்து புதிய உச்சத்தில் வர்த்தகம் செய்யும் போது, மற்ற நிறுவனங்கள் தங்கள் இழப்பைக் குறைத்துக்கொண்டு வருகின்றன.
அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் ரூபாய் 15 லட்சம் கோடிக்கு மேல் மீண்டுள்ளது, ஆனால் குறிப்பிடத்தக்க அளவு ரூபாய் 23 லட்சம் கோடிக்குக் கீழே உள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த சந்தை மூலதனம் ஹிண்டன்பர்க் கட்டுரை வெளியான பொழுது அது அடைந்த சாதனை குறைந்த ரூபாய் 5.8 லட்சம் கோடியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. மீதம் இருக்கும் விசாரணைகளை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய வர்த்தக முடிவில் அதானி குழும பங்குகள் 0.52 சதவிகிதம் முதல் 11.75 சதவிகிதம் வரை உயர்வை கண்டுள்ளன. அறிக்கை வெளியாகும் பொழுது அதானி பங்குகளை வைத்திருப்பவர்கள் காட்டில் அடைமழை பெய்யலாம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision